Tuesday, October 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அனோஜன் சிவராசாவை சிறையில் சந்தித்த இலங்கைத் தூதுவர்!

அனோஜன் சிவராசாவை சிறையில் சந்தித்த இலங்கைத் தூதுவர்!

சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் அனோஜன் சிவராசாவை சந்திப்பதற்கு சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவருக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்புவதற்கு சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இவ்விஜயத்தின் போது, அனோஜன் சிவராசாவின் எதிர்கால வழக்கு நடவடிக்கைகள் குறித்து தூதுவர் அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து சரியான புரிதலை வழங்குவதற்கும், அதற்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்குவதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வழக்கு விசாரணைக்குரிய அனைத்து விடயங்களையும் நடைமுறையிலுள்ள சட்டப் பொறிமுறைக்குள் முறையாகச் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனோஜன் சிவராசாவுக்கு தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கைத் தூதரகம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தூதுவர் அமீர் அத்வாஜ் இதன்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்கால வழக்கு நடவடிக்கைகளுக்காக அனோஜன் சிவராசாவுக்கும் அவரது சட்டத்தரணிகள் மற்றும் தூதரகத்திற்கு இடையே நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணுவதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்செயல்முறையின் போது நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்ட நடைமுறைகளுக்கும் முழுமையான கௌரவம் அளிக்கப்படும் எனத் தூதுவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments