Thursday, July 23, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐதராபாத்தை வீழ்த்தி சி.எஸ்.கே வெற்றி பெறும் - இந்திய முன்னாள் வீரர் நம்பிக்கை

ஐதராபாத்தை வீழ்த்தி சி.எஸ்.கே வெற்றி பெறும் – இந்திய முன்னாள் வீரர் நம்பிக்கை

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் தனது சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) தோல்வி கண்டது. 7-வது ஆட்டத்தில் லக்னோவை தோற்கடித்து ஒருவழியாக வெற்றிப் பாதைக்கு திரும்பியது. ஆனால் அந்த உத்வேகத்தை நீடிக்க முடியாமல் கடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் பணிந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதனால் சென்னை அணிக்கு ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். இந்த இக்கட்டான சூழலில் சென்னை அணி இன்று ஐதராபாத்துடன் மோத உள்ளது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி பெறும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஐதராபாத்தை வீழ்த்தி சி.எஸ்.கே வெற்றி பெறும் என நாம் நம்புகிறேன். சி.எஸ்.கே அணியின் சுழற்பந்துவீச்சு. தோனி தலைமையில் விளையாடுவது வெற்றிக்கான சாவியாக இருக்கும்.

சேப்பாக்கத்தில் அவர்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருப்பதை உறுதி செய்வார்கள். சென்னை அணி முந்தைய தோல்விகளால் முன்னோக்கி வளர்ச்சியடைந்து இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. மறுபுறம் ஹைதராபாத் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments