காயம் காரணமாக நீண்ட காலமாக போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஹார்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
32 வயதான ஹார்திக் பாண்டியா, கடந்த மே 24ஆம் திகதி ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பின்னர் கால் தசைப்பிடிப்பு காரணமாக எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
இந்திய அணிக்காக அவர் கடைசியாக கடந்த மார்ச் 8ஆம் திகதி நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார்.
காயம் காரணமாக அடுத்தடுத்த சர்வதேச தொடர்களை தவறவிட்டுள்ள பாண்டியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் விளையாடுவாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
சர்வதேச ரி20 போட்டிகளில் 138 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹார்திக் பாண்டியா, 2,288 ஓட்டங்களையும் 114 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


