இந்தியா – இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ மிகவும் அற்புதமாக விளையாடினார் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,”டெஸ்ட் கிரிக்கெட்டில் குணம், பொறுமை மற்றும் மன வலிமை மிகவும் முக்கியம். இவை அனைத்தையும் இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ மிகவும் அற்புதமாக விளையாடினார்.” எனப் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த, இந்தியா – இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ, இந்திய அணிதொடரை முழுமையாக வெல்லும் வாய்ப்பை தனது அபார ஆட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 100 மற்றும் 84 ஓட்டங்கள் குவித்த சொனல் தினுஷ, இரண்டாவது டெஸ்ட்டில் 103 மற்றும் 133 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


