Saturday, August 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஆரையம்பதியில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

ஆரையம்பதியில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி பகுதியில் முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சாய்ந்தமருதிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின்கம்பத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 50 வயதுடைய தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் உட்பட, 55 வயதுடைய தந்தையும் 18 வயதுடைய மகளும் படுகாயமடைந்துள்ளனர். மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments