Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ்

மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ்

‘காதல் தேசம்’ தொடங்கி பல படங்களில் நடித்தவர் அப்பாஸ். அவருக்கென தனி ரசிகைகள் கூட்டம் உண்டு. ஹீரோவாக, நண்பனாக பல கேரக்டரில் நடித்தவர். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைந்ததால் குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆனார். ‘ராமானுஜன்’ படத்தில் கடைசி ஆக நடித்தார். அந்த படம் 2014ல் வெளியானது. பின்னர் அவர் இந்தியாவுக்கு அதிகம் வரவில்லை.

இந்நிலையில் மரியராஜா இளஞ்செழியன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் அப்பாஸ். நியூசிலாந்து நாட்டில் செட்டில் ஆனவர், இந்த படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் அப்பாஸ்க்கு வில்லன் வேடமா என்றால், அது சஸ்பென்ஸ். வித்தியாசமான கேரக்டர் என்கிறார் இயக்குனர். இதேபோல் வெளிநாட்டில் செட்டில் ஆன மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவன் மகன் யுகேந்திரனும் சென்னையில் மீண்டும் செட்டில் ஆகி உள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments