Saturday, October 24, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மூன்று மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!

மூன்று மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!

கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (24) மாலை 4.00 மணி முதல் நாளை (25) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை, தெரணியாகலை, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, அரநாயக்க மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments