Wednesday, August 26, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்'சர்தார் 2' படத்தின் First Single 'மயில்வீரா' பாடல் வெளியானது!

‘சர்தார் 2’ படத்தின் First Single ‘மயில்வீரா’ பாடல் வெளியானது!

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கும் இப்படத்தில் கார்த்தி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

இப்படத்தில் கார்த்திக்கு எதிராக எஸ்.ஜே. சூர்யா முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

அதிரடி மற்றும் உளவுத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’, கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா இடையிலான மோதல் படத்தின் முக்கிய அம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘சர்தார் 2’ வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments