Wednesday, November 25, 2026
spot_img
Homeஉலக செய்திகள்என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்!

என்விடியாவில் மீண்டும் இணைந்து கொண்ட ஜென்சன் ஹுவாங்!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா நிறுவனத்தின் தலைமைச் நிறைவேற்று அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

ஆனால்இ பல ஆண்டுகளாகத் தனது தனித்துவ அடையாளமாக அணிந்து வந்த கருப்பு நிற லெதர் கோட்டை இம்முறை அவர் தவிர்த்திருப்பது தொழில்நுட்ப மற்றும் பேஷன் உலகில் பேசுபொருளாகியுள்ளது.

நிறுவன ஊழியர்கள் மற்றும் சீன உளவாளி என அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்துஇ நவம்பர் 12-ம் திகதி ஜென்சன் ஹுவாங் தனது ஊநுழு பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தலைமைத்துவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில்இ என்விடியா நிர்வாகக் குழுவின் ஒருமனதான முடிவின்படிஇ நவம்பர் 23-ம் திகதி திங்கட்கிழமை அவர் மீண்டும் நிறுவனத்தின் தலைவர் ஊநுழு மற்றும் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் கருப்பு டர்டில்நெக் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சாம்பல் நிற டி-ஷர்ட் போலஇ 63 வயதான ஜென்சன் ஹுவாங்கிற்கு கருப்பு நிற லெதர் கோட் மிகப்பெரிய அடையாளமாக இருந்தது.

ஆனால்இ திங்கட்கிழமை அமெரிக்காவின் சான்டா கிளாராவில் உள்ள என்விடியா தலைமையகத்திற்குத் திரும்பியபோது அவர் லெதர் கோட்டுக்கு பதிலாக மிகவும் எளிமையான நேவி ப்ளூ நிற டியோர் ஜிப் வைத்த காட்டன் சட்டை கருப்பு பேண்ட் மற்றும் ஸ்னீக்கர்ஸ் அணிந்திருந்தார்.

உடை மாற்றத்திற்கான காரணம் என்ன?

சமீபத்திய சர்ச்சைகளுக்குப் பிறகு ஹுவாங்கின் அடையாளமாக இருந்த லெதர் கோட்டை இணையவாசிகள் ‘நடுத்தர வயது நெருக்கடியின் வெளிப்பாடு’ எனக் கேலி செய்யத் தொடங்கியிருந்தனர்.

அந்தச் சர்ச்சையான பிம்பத்திலிருந்து விலகி ஒரு புதிய தொடக்கத்தைக் காட்டவே அவர் இந்த உடை மாற்றத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என வடிவமைப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட ஹுவாங்

தலைமையகத்திற்குத் திரும்பிய ஜென்சன் ஹுவாங்கை ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது பேசிய அவர் தனக்கு இரண்டாவது வாய்ப்பு அளித்ததற்காக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இந்தச் சூழ்நிலைக்கு ஆளாக்கியதற்காக மன்னிப்பும் கோரினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments