Thursday, September 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கிழக்கில் 304 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோம் – தடுக்க ‘சரோஜா’ திட்டம்

கிழக்கில் 304 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோம் – தடுக்க ‘சரோஜா’ திட்டம்

– கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர

மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது. எனவே பாதுகாப்பற்ற சிறுமிகள் எத்தனைபேர் உள்ளனர் எனவே இவர்களை பாதுகாப்பதுடன் தடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்;பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஸ்பிரயோகத்தை தடுக்கும் ‘சறோஜா’ திட்டம் ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்படபத்தில் 12 ம் திகதி வியாழக்கிழமை (12) இடம்பெற்ற போது இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

இந்த குழந்தைகள் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் அதனால் இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுpன் தாய் தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை

ஒரு பெண் குழந்தைக்கு பாலியஸ் துஸ்பிரயோகம் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை எனவே துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும்

சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது அந்தையர் வெளிநாடு சென்றிருப்பார் அல்லது தாய் தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள் இவ்வாறு ஏற்படும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாது காப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்க ப்படுகின்றனர்.

எனவே ‘சரோஜா’ திட்டமானது பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர்; பாதுகாப்பதே இந்த திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குpந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு இந்த பாலியல் துஸ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படவேண்டும் ஏன் என்றால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள். வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் பொதுமக்கள் பொலிசாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் தயாரிக்கப்பட்ட இந்த திட்ட நிகழ்வில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் மென்டிஸ். உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலஜஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பெண்கள் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள். வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள், பிரதேச செயலக சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டதுடன்

இதேவேளை பொலிஸ் மா அதிபர் வீடியோ மூலமாக இந்த சரோஜா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியமை குறிப்பிடதக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments