அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் இன்றைய சராசரி கொள்வனவு விலை 324.2860 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 333.2894 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.


