ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்புகிறார்!
அவுஸ்திரேலியா A அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ‘இந்தியா ஏ’ அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவரது உடற்தகுதி சான்றிதழைப் பொறுத்தே அவர் களம் இறங்குவது உறுதி செய்யப்படும்.
மல்டி டே (Multi-day) போட்டிகளுக்கான அணிக்கு தேவ்தத் படிக்கல்லும், ஒருநாள் போட்டிகளுக்கான வெள்ளைப் பந்து (White-ball) அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2 மல்டி டே போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 11 வரை புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.
முதுகு பிடிப்பு மற்றும் தொடை தசை காயம் காரணமாக பிசிசிஐ சிறப்பான மருத்துவப் பயிற்சியில் இருந்த பாண்டியா, மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் வைஷாக் விஜய்குமாரும் உடற்தகுதிக்கு உட்பட்டு மல்டி டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


