தமிழ் திரையுலக நடிகர் சிபி சத்யராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
80-களின் ரெட்ரோ பாணியில் அமைந்துள்ள இந்த புகைப்படங்களில், பழங்கால பைக் ஒன்றில் சிபி சத்யராஜ் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அவரது ஆடை, சிகை அலங்காரம் உள்ளிட்டவை 80-களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
எனினும், புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள பைக்கின் பதிவு இலக்கத்தில் ‘TVK 2026’ என குறிப்பிடப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
தமிழக வெற்றி கழகம் மற்றும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான குறியீடா அல்லது அவரது புதிய திரைப்படத்திற்கான விளம்பர உத்தியா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், 80-களின் பின்னணியில் உருவாகும் திரைப்படத்தில் சிபி சத்யராஜ் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த புகைப்படங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்பது தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


