Monday, October 5, 2026
spot_img
Homeபொது செய்திகள்‘அவதார்’ சாதனையை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’

‘அவதார்’ சாதனையை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மறுவெளியீட்டுடன் உலகளவில் 2.925 பில்லியன் அமெரிக்க டொலர் வசூலைக் குவித்து, அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

2009ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம் 2.923 பில்லியன் டொலர் வசூலுடன் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்து வந்தது. 2019ஆம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ 2.8 பில்லியன் டொலர் வசூலுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது.

இந்நிலையில், மார்வெல் நிறுவனம் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர்’ என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி திரைப்படத்தை மீண்டும் வெளியிட்டது. இதற்கு உலகளவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படத்தின் ஒட்டுமொத்த வசூல் 2.925 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.

இதன் மூலம் ‘அவதார்’ திரைப்படத்தின் வசூலை முறியடித்து, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ உலகின் அதிக வசூல் செய்த திரைப்படமாக முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments