நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட தண்டனையின் மீதமுள்ள காலத்தை அனுபவிப்பதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (5) சிறைக்கைதிகளுக்கான சீருடை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லெதென்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேரரின் காவி உடை அகற்றப்பட்டு, சிறைக்கைதிகளுக்கான சீருடை வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் சாதாரண கைதிகள் தங்க வைக்கப்படும் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் மீதமுள்ள காலத்தை நிறைவேற்றுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அவரைக் கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பகிரங்க பிடியாணையின் அடிப்படையில், சிறைச்சாலை அதிகாரிகள் ஞானசார தேரரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


