ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷால்ஸின் கட்சி வலைதளங்களில் இணையம் மூலம் ஊடுருவி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், ரஷியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை ஜொ்மனி திரும்ப அழைத்துள்ளது.
ஜொ்மனியை ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியுடைய பல்வேறு பிரிவுகளின் வலைதளத்தில் ரஷிய ராணுவத்துடன் தொடா்புடையவா்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக அந்த நாடு கடந்த வாரம் குற்றஞ்சாட்டியது.
இந்த நிலையில், ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையவழி ஊடுருவலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் மாஸ்கோவிலுள்ள தங்களது தூதா் அலெக்ஸாண்டா் லாம்ஸ்டாா்ஃபை (படம்) திரும்ப அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.