Home உலக செய்திகள் இஸ்ரேல் உடனான பேச்சுவார்த்தையை நிறுத்த ஹமாஸ் முடிவு

இஸ்ரேல் உடனான பேச்சுவார்த்தையை நிறுத்த ஹமாஸ் முடிவு

by admin

ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் ஏழு மாதங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஃபா நகரைத் தவிர்த்து ஏறக்குறைய முக்கியமான நகரங்களில் இஸ்ரேல் தடைவழி தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐ.நா. மற்றும் அமெரிக்க இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்திய வருகிறது. இதனால் இரண்டு பக்கத்திலும் இருந்து பேச்சுவார்த்தைக்கு தயாராகி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்போகிறோம். இதனால் ரஃபா நகரில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஃபா மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் எதிர்ப்பு தெரிவித்து, பேச்சுவார்த்தையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy