Home சினிமா டைட்டானிக் திரைப்படத்தில் கேப்டன் கதாபாத்திரத்தில் நடித்த பெர்னார்ட் ஹில் காலமானார்

டைட்டானிக் திரைப்படத்தில் கேப்டன் கதாபாத்திரத்தில் நடித்த பெர்னார்ட் ஹில் காலமானார்

by admin

1912-ல் பிரிட்டனில் இருந்து நியூ யார்க் நோக்கிப் புறப்பட்ட டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் ஐஸ் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏப்ரல் 14-ம் தேதி நடந்தது. அதில்,1500 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

இதை மையமாக வைத்து 1997 ஆம் ஆண்டு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லட் நடிப்பில் ‘டைட்டானிக்’ திரைப்படம் வெளியானது.

உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் வசூலிலும் பல கோடிகளைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.

இந்தப் படத்தில் நடிகர் பெர்னார்ட் ஹில் டைட்டானிக் கப்பலின் கேப்டனாக நடித்திருந்தார். ஆபத்தில் சிக்கிய தன் பயணிகளைக் காப்பாற்ற முடியாததை உணர்ந்ததும் பலருக்கும் முன்பாக உயிரிழப்பார்.

உண்மையான டைட்டானிக் கப்பலின் கேப்டனான எட்வர்ட் ஜே. ஸ்மித், தான் தப்பிச்செல்ல வாய்ப்பிருந்தும் அதை மறுத்து இறுதிவரை போராடி மரணமடைந்தார். பெர்னார்ட் தன் நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்தவர்.

அதன்பின், பெர்னார்ட் ஹில் பல திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றார். இறுதியாக, ‘ஃபாரெவர் யங்’ (forever young) என்கிற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் பெர்னார்ட் ஹில் (79) நேற்று (மே.5) காலமானார். அவரின் மறைவுக்கு உலகம் முழுவதிலும் உள்ள டைட்டானிக் ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy