Home சினிமா ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

by admin

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன்
நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் கடந்த மாதம் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசரை விஜய் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.

அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .

இவர்களுடன் அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.

ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy