Home இந்தியா செய்திகள் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

by admin

மதுரையில் மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. 

புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினமும் அம்மன், சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வெள்ளிக்கிழமையும், திக்கு விஜயம், அஷ்டபாலகா்களை போரிட்டு வெல்லும் நிகழ்வு சனிக்கிழமை இரவும் நடைபெற்றன. இந்த நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் காலை 8.55 மணிக்கு ரிஷப லக்கனத்தில் நடைபெற்றது. வைரக்கற்கள் பதித்த தங்க திருமாங்கல்யம் மீனாட்சியம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. இதையொட்டி, மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்காடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் வெட்டிவோ், பல வகை வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாண மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கனி வகைகள் அடங்கிய அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு இருந்தன. மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண மேடையில் எழுந்தருள, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானையுடனும், பவளக் கனிவாய் பெருமாளும் சனிக்கிழமை மாலை கோயிலில் இருந்து புறப்பாடாகினர். இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சுந்தரேசுவரா், பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் மணக்கோலத்தில் தனித்தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளியவுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. மேலும், ஒரு லட்சம் பக்தா்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy