Home சினிமா சிங்கம் 4 குறித்த பதிவேற்றம் கொடுத்த இயக்குனர் ஹரி

சிங்கம் 4 குறித்த பதிவேற்றம் கொடுத்த இயக்குனர் ஹரி

by admin

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் வெளியாகின. அதுவும் வெற்றி பெற்றன. இந்நிலையில், சிங்கம் நான்காம் பாகம் எடுப்பது குறித்து இயக்குனர் ஹரி பதிவேற்றம் ஒன்றை கொடுத்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹரியிடம் சிங்கம் 4 குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது,

‘நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 குறித்து கேள்வி கேட்கின்றனர். அந்த படத்தின் மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் நான்காம் பாகத்தையும் ஹிட்டாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதனால் அந்த படத்திற்காக நான் அதிக நேரம் செலவிட்டு கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் எப்போது சிங்கம் 4 உருவாகுமென்பதை காலம்தான் தீர்மானிக்கும். இப்போதைக்கு சிங்கம் 4 குறித்த எந்த ஐடியாவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy