Saturday, June 14, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் சிக்கல்?

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் சிக்கல்?

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என நேற்றிரவு அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன.

13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. அதாவது பாதியில் ரத்தான பஞ்சாப்- டெல்லி இடையிலான லீக் ஆட்டமும் மறுபடியும் நடத்தப்பட உள்ளது. எஞ்சிய ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் ஆகிய 6 இடங்களில் நடைபெறுகிறது.

மே 29-ந்தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30-ந்தேதி வெளியேற்றுதல் சுற்றும், ஜூன் 1-ந்தேதி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும், ஜூன் 3-ந்தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. முந்தைய அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9 நாட்கள் ஆட்டம் கூடுதலாக நகர்கிறது. பிளே-ஆப் ஆட்டத்திற்குரிய இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா கூறியுள்ளார்.

இந்நிலையில், எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கலந்து கொள்வதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனெனில், அடுத்த மாதம் 11ம் தேதி லண்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆட உள்ளன. ஐ.பி.எல். தொடர் ஜூன் 3-ந்தேதி முடிவதால் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா வீரர்கள் மீண்டும் இந்தியா திரும்புவார்களா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஐ.பி.எல். தொடரில் ஆடி வரும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் விவரம்:

ஆஸ்திரேலியா: மிட்செல் ஸ்டார்க், ஜேக் பிரேசர் மெக்கர்க், மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட், பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சர்.

தென் ஆப்பிரிக்கா: ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ககிசோ ரபாடா, டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, டி காக், ஜெரால்டு கோட்ஸி, எய்டன் மார்க்ரம், லுங்கி நிகிடி, ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், கார்பின் போஷ், டொனாவென் பெரேரியா, மேத்யூ ப்ரீட்ஸ்கி.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments