அநுராதபுரம் – புத்தளம் வீதியில், சாலியவெவ பகுதியில் 19ஆவது மைல்கல் அருகே சொகுசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான தகவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பான மேலதிக விபரங்களும், விபத்துக்கான காரணமும் இதுவரை வெளியாகவில்லை.


