கொழும்பு, காக்கைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (27) மாலை கொழும்பு காக்கைதீவு கடலில் நீராடச் சென்ற நிலையில், கடலலையில் அள்ளுண்டு சென்ற இளைஞனே இன்று திங்கட்கிழமை (28) சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டனைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஆவார். மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.