கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த 21-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. புனித பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் உடலுக்கு இன்றும் (வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அவரது உடலுக்கு புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. தொடர்ந்து புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
போப் பிரான்சிஸ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளநிலையில் அரசு நிகழ்ச்சிகள் கூடாது என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் (ஏப். 25) அன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அரசு நிகழ்ச்சிகள் கூடாது என உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.