காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவை அவரது இல்லத்தில் வைத்து ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.