பரிசுத்தபாப்பரசர் பதவிக்கு போட்டியாளர்கள் என எவரும் இல்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த பாப்பரசர் பதவிக்கான போட்டியாளர்களில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் ஒருவர் என ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் பதவிக்கு போட்டியாளர்கள் என எவரும் இல்லை,கர்தினாட்கள் குழுவில் உள்ள 252 பேரில் எவரையும் புதிய பாப்பரசராக தெரிவு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிக்க தகுதியான 117 பேர் புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக வாக்களிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த பாப்பரசரை தெரிவு செய்யவுள்ள கர்தினால்கள் மத்தியில் கர்தினால் மல்கம் ரஞ்சித் பிரபலமானவர் என தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் இயக்குநர் ஜூட் கிறிசாந்த தெரிவித்துள்ளார்.