கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், கிரீன்லாந்துக்கும் கனடாவின் பாபின் தீவிற்கும் இடையே உள்ள Davis Strait பகுதியில் புதிய மைக்ரோ கண்டம் (microcontinent) கண்டறியப்பட்டுள்ளது.
சுவீடன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக நடத்திய ஆய்வில், கடலின் அடியில் புதைந்து கிடக்கும் “Proto Microcontinent” எனப்படும் இந்த புதிய நிலப்பகுதி தற்போது அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலப்பகுதி சுமார் 19 முதல் 24 கிலோமீட்டர் வரை அகலமுள்ளதும், சாமான்ய நிலப்பரப்பை விட அடிக்கடி அடர்த்தியுடைய continental crust கொண்டதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புது மைக்ரோகண்டம், கிரீன்லாந்தும் வட அமெரிக்காவும் பிரிந்த போது முழுமையாக பிரியாமல் ஒரு பகுதி இணைந்தே இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஈர்ப்புவிசை தரவு (Gravity data): செயற்கைக்கோள் கருவிகள் ஈர்ப்பு விசையில் நிமிட மாற்றங்களைக் கண்டறிந்தன, அவை பாறைகளின் மேற்பரப்பு அடுக்குகளின் அடர்த்தி மற்றும் விநியோகத்தை கணக்கிட பயன்படுத்தப்பட்டன.
நில அதிர்வு தரவு (Seismic data): கப்பல்களிலிருந்து ஒலி அலைகள் ஒளிபரப்பப்பட்டன, மேலும் அவற்றின் பிரதிபலிப்பு அலைகள் கடற்பரப்பின் கட்டமைப்பு
120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்து பிரிதல் ஆரம்பமான நிலையில், 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த புதிய மைக்ரோகண்டம் உருவாகத் தொடங்கியது.
இதையடுத்து, 33 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்து Ellesmere தீவுடன் மோதியதனால் அப்பகுதி தற்போது நிலையானதாக மாறியது.
இது போன்ற மைக்ரோகாண்டினெண்ட்கள் பிற இடங்களிலும் (Jan Mayen, Tasman Rise) காணப்பட்டுள்ளன.
பூமியின் உள் கட்டமைப்பு நிலப்பலகைகள் இயக்கத்தில் முக்கிய பங்காற்றுவதை இது வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.