கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சர்ரே நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமிநாராயண் கோவிலில் இரவு 3 மணியளவில் புகுந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருவர் அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். கோவில் நுழைவு வாயிலில் உள்ள தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசங்களையும் அவர்கள் எழுதிவைத்துச் சென்றனர். அவர்கள் முகத்தை துணியால் மூடி இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
கோவிலில் இருந்து கண்காணிப்பு கேமரா ஒன்றையும் அவர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் அடையாளம் தெரியா நபர்களால் கொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக் கொண்டு கனடாவில் உள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.