கடலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகில் உள்ள புறவழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. சாலையை இருசக்கர வாகனம் கடக்க முயன்றபோது கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நேரு, கல்பனா மற்றும் சரண்யா ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.உயிரிழந்த மூவரும் முந்திரி தோட்டத்துக்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சென்றபோது கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.