தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் நடிகர் கார்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டிரெய்லரில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது. படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் இப்படம் குழந்தைகளுக்கும் இதய பலவீனமானவர்களுக்கு ஏற்ற படம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.
நானியின் ஹிட் 3 பட முன்னோட்டம் வெளியீடு
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on