தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, ‘கருடன், கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘கருடன்’ திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார். இது குடும்ப உறவுகள் அது தொடர்பான உணர்வுகளை மையமாகக் கொண்ட படம் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு ‘மாமன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சூரியின் ‘மாமன்’ படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். அங்கு படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது நடிகர் சூரி சிவகார்த்திகேயனை ஆரத்தழுவி கன்னத்தில் முத்தமிட்டார். இது குறித்த பதிவை சூரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.மாமன் படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் சூரி நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம், வருகிற மே 16ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
சூரியின் “மாமன்” படம் மே 16ம் தேதி வெளியீடு
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on