சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுகுமார் தமிழில் எந்த நடிகரை வைத்து படத்தை இயக்குவீர்கள் என கேட்ட கேள்விக்கு. இயக்குநர் சுகுமார் ” நான் தமிழில் திரைப்படம் இயக்கினால் நடிகர் விஜய் , அஜித் மற்றும் கார்த்தியை வைத்து திரைப்படம் இயக்குவேன்” என பதிலளித்துள்ளார்.
தமிழில் கார்த்தியை வைத்து படம் இயக்குவேன்’ – புஷ்பா இயக்குநர் சுகுமார்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on