36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அலி பசல் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ‘தக் லைப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதி இருக்கிறார். இந்த நிலையில், தக் லைப் படக்குழு ‘ஜிங்குச்சா பாடலின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கமல் மற்றும் சிம்பு இருவரும் நடனமாடும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘தக் லைப்’ படக்குழு புதிய பதாகையை வெளியிட்டது
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on