நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியீடு ஆகிறது.
இந்த படத்திற்குப் பிறகு சுந்தர் சி மூக்குத்தி அம்மன்-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சுந்தர் சி நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். மூக்குத்தி அம்மன்-2 படம் நிறைவடைந்ததும், கார்த்தியை வைத்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
கார்த்தி தற்போது ‘சர்தார்-2’, ‘வா வாத்தியாரே’ படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் ‘கைதி-2’ படத்தில் நடிக்க போவதாகவும் பேசப்படுகிறது. மேலும், சிறுத்தை சிவா உடன் மீண்டும் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.