Sunday, April 6, 2025
spot_img
Homeபொது செய்திகள்கருத்தை பதிவிடுக கோவிலுக்கு சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் தாய் மற்றும் 5 வயது மகன்...

கருத்தை பதிவிடுக கோவிலுக்கு சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் தாய் மற்றும் 5 வயது மகன் பலி

சேலம் சூரமங்களத்தை சேர்ந்த சித்தன் மகன் ராஜ்குமார். இவர் மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி, இவர்களுக்கு அஸ்வரதன் என்கிற 5 வயது மகன் இருந்தார்.

இந்த நிலையில் ராஜ்குமார் தனது உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். கார் இன்று அதிகாலை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ராஜ்குமாரின் மனைவி தமிழரசி மற்றும் மகன் அஸ்வரதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழனதனர். மேலும் காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments