Tuesday, April 1, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐ.பி.எல். வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா

ஐ.பி.எல். வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா

ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை அணியினர், பெங்களூருவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவினாலும் ஐ.பி.எல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனை ஒன்றை சி.எஸ்.கே அணி வீரர் ஜடேஜா படைத்துள்ளார்.

அதாவது ஐ.பி.எல் தொடரில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக ரசல் உள்ளார். ஐ.பி.எல்-லில் 1000 ரன்களுக்கு மேல் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியல்:

ரவீந்திர ஜடேஜா – 3,001 ரன்கள் மற்றும் 160 விக்கெட்டுகள்

ஆண்ட்ரே ரசல் – 2,488 ரன்கள் மற்றும் 115 விக்கெட்டுகள்

அக்சர் படேல் – 1,675 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகள்

சுனில் நரைன் – 1,578 ரன்கள் மற்றும் 181 விக்கெட்டுகள்

டுவைன் பிராவோ – 1560 ரன்கள் மற்றும் 183 விக்கெட்டுகள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments