Thursday, November 26, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசு!

மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசு!

தமிழ் மொழியின் பெருமையையும், திருக்குறளின் சிறப்பையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழக அரசு புதிய ஊக்குவிப்புத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 5ஆம் வகுப்பு வரையான தொடக்கப்பள்ளி மாணவர்கள் 300 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தால், அவர்களுக்கு தலா 5,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

1,330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமின்றி, அவற்றில் 300 குறள்களைத் தெரிவுசெய்து ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 500 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளனர்.

இளம் தலைமுறையினரிடையே தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்ப்பதுடன், திருக்குறளின் அறக்கருத்துகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments