Wednesday, November 11, 2026
spot_img
Homeபொது செய்திகள்புதுவகை கொரோனா பரவல்

புதுவகை கொரோனா பரவல்

புதுவகை கொரோனா பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன்முறையாக 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது.

பின்னர் 2020-ம் ஆண்டு முதல் இதன் பரவல் தீவிரமடைந்து, உலக நாடுகள் முழுவதும் பல அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அவ்வப்போது ஒமைக்ரான் உள்ளிட்ட அதன் புதிய வகைகள் பரவி வந்தன. ஆனால், பெரிய பாதிப்புகள் எதனையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், புதுவகை கொரோனா பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

வடஅமெரிக்கா முழுவதும் புதுவகை கொரோனா பரவி வருகிறது. கனடாவின் ஒன்டாரியோ நகரில் முதன்முறையாக கடந்த மே மாதம் அடையாளம் காணப்பட்ட இந்த பி.ஜே.2.1 என்ற வகை கொரோனா வைரசானது, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசிய பகுதிகளிலும் பரவியுள்ளது கண்டறியப்பட்டது.

இதனால், பாதிப்புக்கான அடுத்த அலை பரவலுக்கான சாத்தியம் உண்டா? அல்லது இருக்கின்ற எதிர்ப்பு சக்தியே போதிய பாதுகாப்பானதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என தெரிவித்து உள்ளது.

இதன் அறிகுறிகள், இன்புளூயன்சா மற்றும் பிற சுவாச பாதிப்புகளை கடந்தும் தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் என்று சுட்டி காட்டியிருக்கிறது.

இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசர தேவையும் உள்ளது என்று தெரிவித்து உள்ளது. இதற்கு முன்னர், பரவிய வைரசை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஒன்றா? என உறுதிப்படுத்துவதற்கான போதிய சான்று எதுவும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments