‘இசைக்கலைமணி’ ஶ்ரீமதி காந்தினி சம்பந்தன் அவர்களை நிறுவனராகவும். குருவாகவும் மாணவர்களின் வழிகாட்டியாகவும் கொண்ட கனடா – ரொறன்ரோ- ‘ஸ்வராலயா இசைப் பள்ளி’யானது கடந்த 07-11-2026 அன்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் மற்றும் கலா ரசிகர்களோடு இணைந்து கொண்டாடிய 15வருட கால கர்நாடக இசைப் பயணத்தின் வெற்றி விழா மறக்க முடியாத ஒரு இசை விழாவாக எம் கண்களின் முன் காட்சியளிக்கின்றது என்றால் அது மிகையாகாது.
‘ஸ்வராலயா இசைப் பள்ளி’யில் கடந்த பல வருடங்களாக கர்நாடக சங்கீதத்தை பயில்வதன் மூலம் இசையையும், அதனோடு எமது மொழியையும் சமயத்தையும் இணைத்து தங்களை முழு மனிதர்களாக ஆக்கும் வகையில் தங்கள் இசைப்பயணத்தை தொடரும் வகையில் தங்களை அடையாளப்படுத்தும் ‘ஸ்வராலயா இசைப் பள்ளி’அனைத்து மாணவர்களும் அங்கு உற்சாகத்துடன் காணப்பட்டார்கள்.
ஸ்காபுறோ சத்திய சாயி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி ஆண்டு விழாவிற்கு பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ஐயா மற்றும் கௌசல்யா சுப்பிரமணியன் அம்மா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். சிறப்பு விருந்தினராக உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் துணைத் தலைவருமான லோகேந்திரலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


