Wednesday, November 11, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கேடட் மேற்பார்வையாளர் தாக்குதல்: டக் ஃபோர்ட் கடும் கண்டனம்!

கேடட் மேற்பார்வையாளர் தாக்குதல்: டக் ஃபோர்ட் கடும் கண்டனம்!

Ontario மாகாண முதல்வர் Doug Ford, இந்த மாத தொடக்கத்தில் Hamilton நகரில் விமானப்படையின் Cadet மேற்பார்வையாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இத்தகைய செயல் ஒருவர் செய்யக்கூடிய “மிகவும் அருவருப்பான செயலாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

கனேடிய ஆயுதப் படையைச் சேர்ந்த 59 வயதுடைய Kenneth Kunkel என்பவர், November 1 ஆம் திகதி நினைவு தினத்திற்கான பொப்பி மலர் சின்னங்களை (Poppies) விநியோகிக்கும் பணியில் விமானப்படை மாணவர்களை மேற்பார்வையிட்டு வந்துள்ளார். அப்போது, Hamilton இல் உள்ள The Centre on Barton வணிக வளாகத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்பாக, இரண்டு இளைஞர்கள் மாணவர்களை அணுகி, அவர்களின் காதுகளுக்கு அருகில் அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பானை (Air Horn) ஒலிக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, Kunkel சந்தேகநபர்களைப் பின்தொடர்ந்து உணவகத்திற்குள் சென்று அவர்களிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, ஆரம்பத்தில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்பில்லாத பெண் ஒருவர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இளைஞர் ஒருவர் Kunkel ஐ பலமுறை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை Ontario வின் Peterborough நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தச் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் இளைஞர்களின் பெற்றோர் “வெட்கப்பட வேண்டும்” என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

“பெற்றோர் இந்தக் கருத்தைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, உங்கள் பிள்ளைகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்குத் தகுந்த தண்டனையை வழங்க வேண்டும்” என அவர் கூறினார்.

“நமது நாட்டிற்குச் சேவையாற்ற முயற்சிக்கும் விமானப்படை மாணவர்களை ஒரு சிறுவன் தாக்குவது என்பது ஒருவர் செய்யக்கூடிய மிகவும் அருவருப்பான செயலாகும்” என்றும் Doug Ford கடுமையாக விமர்சித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 12 வயதுடைய சிறுவன் மீது தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 48 வயதுடைய பெண் ஒருவர் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், குறித்த பெண்ணின் அடையாளத்தைப் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments