Wednesday, November 11, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் ஊடக நிறுவனங்களுக்கான அரச நிதி உதவி நிரந்தரமாக்கம்

கனடாவில் ஊடக நிறுவனங்களுக்கான அரச நிதி உதவி நிரந்தரமாக்கம்

கனடாவின் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், ஊடக நிறுவனங்களுக்கான பத்திரிகையாளர் தொழிலாளர் வரிச் சலுகை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செய்தி நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் நிதி உதவி தொடர்ந்து கிடைக்கவுள்ளது.

2019ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுகளுக்கு தற்காலிகத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சலுகை, தற்போது நிரந்தரத் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, தகுதிபெறும் ஊடக நிறுவனங்களின் ஊழியர் சம்பளத்தில் 35 சதவீதம் வரை, அதிகபட்சமாக 85,000 டொலர் சம்பளத்திற்கு வரிச் சலுகை வழங்கப்படும். இதன் மூலம் ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு சுமார் 29,750 டொலர் வரை சலுகை கிடைக்கலாம்.

முன்னதாக, 55,000 டொலர் வரையிலான சம்பளத்தில் 25 சதவீதம், அதாவது அதிகபட்சம் 13,750 டொலர் மட்டுமே வழங்கப்பட்டது.

கனடா வருவாய் முகவரகத்தால் இதுவரை 194 செய்தி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் கீழ் 350க்கும் மேற்பட்ட ஊடகத் தளங்கள் இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த வரிச் சலுகைத் திட்டம் ஒளிபரப்பு ஊடகங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்கான தகுதிச் செயல்முறைக்கு உட்பட்டு, 1,100க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்களும் சுமார் 100 தொலைக்காட்சி நிலையங்களும் சலுகையைப் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்தின் நிதி உதவியில் நீண்டகாலம் தங்கியிருக்கும் நிலை உருவாகலாம் என இந்தத் திட்டம் குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரச நிதி உதவி ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதிக்குமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments