தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளைத் தெரிவு செய்து நடித்து வரும் நடிகர் மணிகண்டனின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் இயக்கும் இந்தப் புதிய திரைப்படத்தில், பிரபல இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிவகங்கை மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமப்புறப் பகுதிகளில் படமாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற மணிகண்டன், இந்தப் புதிய படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் களமிறங்குகிறார்.
மிஷ்கினின் நடிப்பும், அறிமுக இயக்குநரின் புதிய முயற்சியும் இணைந்துள்ளதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


