Wednesday, November 11, 2026
spot_img
Homeகனடா செய்திகள்4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் கண்காட்சி மைதானம்!

4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் கண்காட்சி மைதானம்!

இங்கிலாந்தின் பீட்டர்பரோவில் அமைந்துள்ள East of England Showground கண்காட்சி மைதானத்தில், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நிகழ்வொன்று நடத்தப்படவுள்ளது.

இதற்கான அனுமதி குத்தகைதாரர்களால் வழங்கப்பட்டுள்ள நிலையில், Up the Garden Bath என்ற சமூக அமைப்பு, எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 100 விற்பனைக் கூடங்களைக் கொண்ட கைவினைப் பொருட்கள் சந்தையை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்வு கண்காட்சி மைதானத்தின் அரங்கில் அமைந்துள்ள Atrium பகுதியில் நடைபெறவுள்ளது.

இது குறித்து அமைப்பின் இணை நிறுவனர் Kez Hayes Palmer கருத்துத் தெரிவிக்கையில், East of England Arena நீண்டகாலமாக பீட்டர்பரோ மக்களின் முக்கியமான இடமாக இருந்து வந்துள்ளதாகவும், மீண்டும் மக்கள் நடமாட்டம், மகிழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகளால் அந்தப் பகுதி களைகட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கண்காட்சி மைதானத்தில் நிகழ்வு நடைபெறவிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளூர் கவுன்சிலர் Kirsty Knight தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 165 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தக் காணியின் ஒரு பகுதியில் 1,500 வீடுகளை அமைப்பதற்கான திட்டம், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான கவலைகளால் 2025ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கண்காட்சி மைதானத்தின் எதிர்காலப் பயன்பாடு குறித்து வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கருத்துகள் கோரப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாகவே தற்போது கிறிஸ்துமஸ் கைவினைப் பொருட்கள் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments