Wednesday, November 11, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இஸ்ரேல் இடைக்காலப் பிரதமராக நெதன்யாகு!

இஸ்ரேல் இடைக்காலப் பிரதமராக நெதன்யாகு!

இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் சூழலில், பெஞ்சமின் நெதன்யாகு இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இஸ்ரேல் அரசின் அடிப்படைச் சட்டப் பிரிவு 30-ன் (Basic Law: The Government) படி, புதிய அரசுப் பதவியேற்கும் வரை தற்போதைய இடைக்கால அரசு நாட்டின் நிர்வாகப் பொறுப்புகளைத் தொடர்ந்து கவனிக்கும்.

எனினும், இந்த இடைக்கால ஆட்சிக்காலத்தில் பிரதமரின் அதிகாரங்கள் எந்த அளவிற்குச் செயல்படும் என்பது குறித்து  சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் அரசியல் சட்டப்பிரிவு 40-ன் படி, பாதுகாப்பு அமைச்சரவையின் (Security Cabinet) ஒப்புதலுடன் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் புதிய போர்களை மேற்கொள்ளும் அதிகாரம் இடைக்கால அரசிற்கு முழுமையாக உள்ளது. உள்நாட்டு உளவு அமைப்பான ‘ஷின் பெட்’ (Shin Bet) நேரடியாகப் பிரதமரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் எனச் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே வேளையில், தங்களுக்குப் நாடாளுமன்றப் (Knesset) பெரும்பான்மை இல்லாததால் புதிய சட்டங்களை இயற்றுவதற்கோ அல்லது நெதன்யாகு மீது நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்கான சட்டப் திருத்தங்களை மேற்கொள்வதற்கோ வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

இடைக்கால அரசு நாட்டின் பாதுகாப்பையும் அன்றாட நிர்வாகத்தையும் கவனிக்க சட்டபூர்வ அனுமதி பெற்றிருந்தாலும், முக்கியக் கொள்கை முடிவுகளை எடுப்பதில் நிதானத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலப் பொருளாதாரத்தைச் பாதிக்கும் வகையிலோ அல்லது அடுத்த கட்ட அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலோ முடிவுகளை எடுக்க முடியாத வகையில் நிதியமைச்சகம் மற்றும் தலைமை வழக்கறிஞரின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

தற்போது புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய அரசு அமையும் வரை நெதன்யாகுவின் இடைக்கால ஆட்சி தொடர்ந்து செயல்படும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments