ஹோர்முஸ் நீரிணை மூடல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் இருந்து, சீனா தன்னை வெற்றிகரமாகப் பாதுகாத்துக் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ‘ரோஸ்நெப்ட்’ தலைவர் இகோர் செச்சின் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வலுவான எண்ணெய் கையிருப்பு மற்றும் ரஷ்யாவுடனான நெருங்கிய கூட்டுறவே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் பேசுகையில், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை சீனா மட்டுமே பெறும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியது முதல், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எரிசக்தியைக் கொள்முதல் செய்யும் மிகப்பெரிய நாடாக சீனா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


