மகிந்த அரசாங்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுகரிப்பு வர்தமானியை நீக்குவதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அநுர தலைமையிலான அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என காணியை இழந்த மக்கள் கூட்டமைப்பின் செயற்பாட்டாளார் ஜான்சன் பிரிடாரோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். வலி வடக்கு மயிலிட்டி பகுதியில் இன்று (04) 20ஆவது வாரமாக இடம்பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வலி வடக்கு மக்களின் சுமார் 6317 ஏக்கர் காணிகளை மகிந்த அரசாங்கம் கையகப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டுள்ளது.


