மத்திய கிழக்கில் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்! தெற்கு லெபனானின் ‘ஜவ்தார் அல்-ஷர்கியா’ நகரின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலால் அப்பகுதியில் பயங்கர தீப்பற்றி எரிவதாக லெபனானின் தேசிய செய்தி முகவாமை தெரிவித்துள்ளது.
லிட்டானி நதிக்குத் தெற்கே உள்ள பகுதிகளில் கடந்த பல வாரங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே வெள்ளிக்கிழமை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போரை நிறுத்துவதற்காக அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருப்பினும், ஒப்பந்த விவாதங்களை மீறி தெற்கு லெபனான் எல்லையில் தொடர்ந்து மோதல்கள் தீவிரமடைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


