கிளிநொச்சி மாவட்டத்தின் நீண்டகால காணிப் பிரச்சினைகள், வீடமைப்புத் திட்டங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மணல் மாஃபியாவின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04) மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றுள்ளது.


