Saturday, July 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பரீட்சையானது நாடு முழுவதிலும் உள்ள 2,723 மையங்களில் நடத்தப்படும்.

இரண்டாம் பாகம் முற்பகல் 9.30 முதல் 10.45 மணி வரையிலும், முதலாம் பாகம் முற்பகல் 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரையிலும் நடத்தப்படும்.

விண்ணப்பதாரர்களின் வருகைப் பதிவேடுகள் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தங்கள் தகவல்களைத் திருத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள், www.doenets.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பரீட்சைகள் தகவல் மையத்தை அணுகுவதன் மூலமாகவோ அல்லது http://onlineexams.gov.lk மூலமாகவோ, ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3, 2026 வரை இணையவழியில் அவற்றை மேற்கொள்ளமுடியும்.

மேலதிக விசாரணைகளுக்கு, பரீட்சாத்திகள், 011-2784208, 011-2784537, 011-2786616 அல்லது 011-2785413 ஆகிய எண்களில் திணைக்களத்தை தொடர்பு கொள்ள முடியும்.

அத்துடன் 1911 என்ற துரித இலக்கத்துக்கும் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments